×

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனிஷ்க் ஷோரூம்களில் அட்டகாசமான சலுகை

சென்னை: டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் சார்பில், இந்த ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடிட அளவில்லாத நகை ரகங்களை அறிமுகம் செய்கிறது. மாபெரும் கடலை போன்று எல்லையற்ற பொலிவுடன் திகழும் ஒவ்வொரு பெண்ணும் கருணையின் உருவகம். நேர்த்தியானதும் நீடித்து உழைக்கக் கூடியதுமான ஆபரணங்களின் மூலம், பெண்களின் எல்லையற்ற ஆன்மாவை கொண்டாடும் வகையில், அவர்களுக்காகவே இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு முறை நகை வாங்கும் போதும் இலவச தங்க நாணயம் மற்றும் வைர நகைகளின் மீது அதன் மதிப்பில் 20% வரையிலும் தள்ளுபடியையும் வழங்குகிறது.

இந்த பண்டிகையை மேலும் உற்சாகமிக்கதாக மாற்றும் வகையில், வாடிக்கையாளர்கள் எந்த நகை கடைக்காரர்களிடமிருந்தும் வாங்கிய பழைய தங்க நகைகள் மீது 100% எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். இந்த ஆடியில், நேர்த்தியான வடிவமைப்புகளை கொண்ட சிறப்பான நகைகளை வாங்கி, தனிஷ்க் உடன் சேர்ந்து, புதிதாக தொடங்கிடும் இந்த சீசனை கொண்டாடுங்கள். இந்த சலுகை நாளை வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிஷ்க் ஸ்டோர்களிலும் கிடைக்கும். சுத்தத்தையும், தூய்மையையும் உருவாக்கும் நீரைப் போல, தங்கமும் மனதை உன்னதமாக்கி, உடலையும் ஆன்மாவையும் தூய்மையாக்குவதாக நம்பப்படுகிறது. இந்த ஆடிப் பெருக்கில், தனிஷ்க் வழங்கும் சிறப்பு சலுகைகள் மூலம் பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அறிவார்ந்த ஆன்மாவை மேன்மையுறச் செய்யுங்கள், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனிஷ்க் ஷோரூம்களில் அட்டகாசமான சலுகை appeared first on Dinakaran.

Tags : Tanishq ,CHENNAI ,Tata Group ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...