×

அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்களர் பட்டியல்: இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களுக்கு பொதுவான வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த இந்திய சட்ட ஆணையம் தனது 255வது அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இந்த பரிந்துரை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் இருப்பதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்களர் பட்டியல்: இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Law Commission of India ,New Delhi ,ADMK ,Rajya Sabha ,Parliament ,Thambidur ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு