×

மணிப்பூரில் போலீஸ் ஆயுத கிடங்கை சூறையாடி இயந்திர துப்பாக்கிகள் 19000 தோட்டாக்கள் கொள்ளை

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தில் பலியான குக்கி சமூகத்தை சேர்ந்த 35 பேரின் உடல்களை சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே இறுதி சடங்கு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மெய்டீஸ் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே திரண்டனர். பிஸ்னுபூர் மாவட்டத்தின் நரன்செய்னாவில் ஏராளமானோர் ஒன்று திரண்டு சுராசந்த்பூர் நோக்கி பேரணி செல்லவுள்ளதாக தெரிவித்தனர். திடீரென அவர்கள் அங்குள்ள 2வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஆயுத கிடங்கை சூறையாட தொடங்கினார்கள். அங்கிருந்து சுமார் 19000 தோட்டாக்கள், ஏகே ரக துப்பாக்கிகள், கடாக் ரைபிள்ஸ், 195 ரக ரைபிள்ஸ், பிஸ்டல்கள், 25 புல்லட் ப்ரூப் உடை, கையெறி குண்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் தலைநகர் இம்பால் உள்ளிட்ட இரண்டு இடங்களிலும் இருந்த ஆயுத கிடங்குகளையும் சூறையாட முயற்சித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்தது. ஆனால் போலீசார் அதனை முறியடித்தனர்.

The post மணிப்பூரில் போலீஸ் ஆயுத கிடங்கை சூறையாடி இயந்திர துப்பாக்கிகள் 19000 தோட்டாக்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Surachandpur district ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...