×

திருத்தணி கோயிலில் ரூ.1.08 கோடி காணிக்கை

திருத்தணி: திருத்தணி கோயிலில் பக்தர்கள் ரூ.1.08 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

இதில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், கடந்த 8 நாட்களில் ரூ.95,87,078 மற்றும் 339 கிராம் தங்கம், 6,842 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இதேபோல், திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.12,53,830 கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post திருத்தணி கோயிலில் ரூ.1.08 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruthani Temple ,Thiruthani ,Thiruthani temple ,Tiruthani Subramaniasamy Temple ,Lord Muruga ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...