×

சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்ததாக இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

முன்னதாக, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்து உள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனை அடுத்து சந்திராயன்-3 ஆகஸ்ட் 5, 2023இல் நிலவின் சுற்றுப்பாதை முழுதாக செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தது.

அதன்படி, தற்போது விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு அமைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 நிலவுக்கு மிக அருகில் (பெரிலூன்) இருக்கும் போது இந்த சூழ்ச்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேற்கண்ட முயற்சிகள் வெற்றி பெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

The post சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்ததாக இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Moon ,Sriharikota ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...