×

நீதி உயிர்ப்புடன் இருப்பதற்கு இன்றைய உத்தரவு ஒரு சாட்சி; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி: மல்லிகார்ஜுன கார்கே வரவேற்பு

டெல்லி: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரவேற்பு தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மல்லிகார்ஜுன கார்கே,

ஜனநாயகம் வென்றுள்ளது:

உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. நீதி உயிர்ப்புடன் இருப்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு சாட்சி என்று கார்கே தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். உண்மை மட்டுமே வெல்லும்; உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது; பாஜகவின் சதி முற்றிலும் அம்பலமானது என்று குறிப்பிட்டார்.

நீதி வென்றது, சத்தியம் வென்றது:

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் நீதி வென்றுள்ளது, சத்தியம் வென்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்கள் தீங்கிழைக்கும் வகையில் குறிவைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது என்று கார்கே தெரிவித்தார்.

மகிழ்ச்சியான தருணம்:

உண்மை மட்டுமே வெல்லும். ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

சபாநாயகருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்:

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதை மேற்கோள்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராகுலுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என சபாநாயகருக்கு கார்கே கடிதம் எழுதியிருக்கிறார். 24 மணி நேரத்தில் சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post நீதி உயிர்ப்புடன் இருப்பதற்கு இன்றைய உத்தரவு ஒரு சாட்சி; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி: மல்லிகார்ஜுன கார்கே வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,India ,Mallikarjune Karke ,Delhi ,Congress ,Mallikarjuna Karke ,Rahul Gandhi ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு