×

உச்சகட்டத்தை எட்டும் வார்த்தைப் போர்.. கூட்டணியில் உச்சகட்ட குழப்பம்: அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை: பா.ம.க.வின் முடிவு, அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக அதிமுக கூட்டணியில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது; தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2026-ல் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இ ணைந்து பா.ம.க. கூட்டணி அமைக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை 2024-ல் வகுப்போம். தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணியில் இல்லை. தேசிய அளவிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே பா.ம.க. தொடர்கிறது எனவும் கூறினார்.

பா.ம.க. நிலைப்பாடு காரணமாக அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என பழனிசாமி கூறிவரும் நிலையில் அன்புமணி கருந்தால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார் என்பது அவருக்கே தெரியும். செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி அதிமுகவினரை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. எங்களை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக் கூடிய சூழல் நிச்சயம் ஏற்படும். எதிர் விமர்சனம் செய்யும் நிலையை அண்ணாமலை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது என்று ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், விவசாயிகள், ஏழைகள் ஆதரவு இல்லை. பாஜகவை வளர்க்க அண்ணாமலை ஆசைப்படுகிறார்; ஆனால் ஆசை வேறு, நடைமுறை வேறு எனவும் கூறினார். பா.ம.க.வின் முடிவு, அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக அதிமுக கூட்டணியில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. அதிமுக-பாஜக தலைவர்கள் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வரும் நிலையில் கூட்டணியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொள்வதால் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது.

The post உச்சகட்டத்தை எட்டும் வார்த்தைப் போர்.. கூட்டணியில் உச்சகட்ட குழப்பம்: அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Word ,G.K. Wynn ,Opinion Alliance ,Annamalai ,
× RELATED பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு...