×

நெய்வேலியில் விவசாயிகளின் பயிர்கள் சேதப்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.40,000 காசோலை வழங்கப்பட்டது..!!

 

நெய்வேலி: நெய்வேலியில் விவசாயிகளின் பயிர்கள் சேதப்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.40,000 காசோலை வழங்கப்பட்டது. என்எல்சி நிறுவனம் கடந்த 26ல் வளையாமாதேவியில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சேதப்படுத்தப்பட்ட பயிர்களின் ஏக்கருக்கு இழப்பீடு தொகையாக ரூ.40,000 இன்று முதல் வழங்கப்படும் என என்எல்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே, அறிவித்தபடி ரூ.30,000 இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டு இருந்தால், மீதமுள்ள தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இந்த இழப்பீடு தொகைக்கான காசோலைகளை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் என என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, என்எல்சி வழங்கவுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள 6 விவசாயிகள் இன்று அலுவலகத்திற்கு வருகை தந்தனர். 15.5 ஹெக்டேருக்கு பயிர்கள் சேதமடைந்த நிலையில் 20 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது. 6 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா வழங்கினார்.

The post நெய்வேலியில் விவசாயிகளின் பயிர்கள் சேதப்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.40,000 காசோலை வழங்கப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Neyveli ,NLC Company ,Brangamadevi ,
× RELATED விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ்...