×

பாஜக தலையில் விழுந்த மரண அடி: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் வரவேற்பு

டெல்லி: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் நீதிமன்றம் விதித்திருந்தது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலையில் விழுந்த மரண அடி: கே.பாலகிருஷ்ணன்

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிரடி உத்தரவு பாஜக தலையில் விழுந்த மரண அடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நாளே எம்.பி. பதவியை பறிப்பது உள்ளிட்டவை வேக வேகமாக நடந்தது. ராகுலை முடக்க நினைத்த பாஜகவின் அத்தனை முயற்சிகளையும் உச்சநீதிமன்ற உத்தரவு உடைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு வரவேற்கத்தக்கது: முத்தரசன்

உச்சநீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக எதிர்க்கட்சிகளை பல கோணங்களில் பழி வாங்கும் செயலில் ஈடுப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை பழிவாங்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் ராகுல் காந்தி மீதான வழக்கு. ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கினார்கள். பாசிச ஆட்சியில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என காட்டமாக தெரிவித்தார்.

The post பாஜக தலையில் விழுந்த மரண அடி: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Bajaka ,K.K. Balakrishnan ,Mutharasan ,Delhi ,Ragul ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...