×

மேற்கு வங்கம் பெங்காலி ஒடிசா தொழிலாளர்கள் குறுவை நடவு பணி

*நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் மும்முரம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் மேற்கு வங்கம் பெங்காலி, ஒடிசாவை சேர்ந்த ஆண், பெண்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை அதிக அளவு பெய்ததால். கர்நாடக அணைகள் நிரம்பியது. இதையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 24 ம் தேதியே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இது வரலாறு காணாத நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்த காரணத்தினால் வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி தமிழக முதல்வர் விவசாயத்திற்கு தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்டார். 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளான சித்தமல்லி, பரப்பனாமேடு, மேலபூவனூர், காளாச்சேரி, ராயபுரம், ரிஷாயூர் அனுமந்தபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் 34 ஆயிரம் ஏக்கரில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறுவை நடவுப் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளில் சிலர் ஏற்கனவே 16,500 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி படி பணியை முடித்து குறுவை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். தற்போது கோடையில் நிலத்தடி நீரை மின் மோட்டாரில் குறுவை சாகுபடி பணியை பெரும்பாலான இடங்களில் தொடங்கியதால் நடவு பணிக்கு பணியாளர்கள் வேலை செய்ய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீடாமங்கலம் பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெங்காலியர்கள் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் இரு பாலரும் குறுவை நாற்றுகளை பறித்து நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் விவசாயிகளுக்கு நடவு செலவு மிச்சம் என கூறப்படுகிறது.

The post மேற்கு வங்கம் பெங்காலி ஒடிசா தொழிலாளர்கள் குறுவை நடவு பணி appeared first on Dinakaran.

Tags : West ,Needamangalam ,Zone ,West Bengal Bengali, Odisha ,
× RELATED எல்லையில் துப்பாக்கியுடன்...