×

ஜப்பானில் நடைபெற்ற தலைகீழாக குதிக்கும் நீச்சல் சாகசப் போட்டி: ஆடவர் பிரிவில் பிரிட்டனின் ஆடன் ஹஸ்லூப் சாம்பியன் பட்டம் வென்றார்..!!

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்ற தலைகீழாக குதிக்கும் நீச்சல் சாகசப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜப்பானில் உள்ள டகாசிக்கோ பள்ளத்தாக்கில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாகச போட்டியில் இருபாலர் பிரிவிலும் உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஆடவர் பிரிவில் பிரிட்டனின் ஆடன் ஹஸ்லூப் 458 புள்ளி 4.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 2வது மற்றும் 3வது இடங்களின் முறையே ருமேனியாவின் போவோபிஸி அமெரிக்காவின் ஜெம்ஸ் வென்றனர். மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ரியானன் மாயாஜாலம் காட்டி சாம்பியன் பட்டம் வென்றார். 2வது மற்றும் 3வது இடங்களின் முறையே கெனடாவின் மோலி கால்சன், ஆஸ்திரேலியாவின் பெனிசி கைப்பற்றினர்.

The post ஜப்பானில் நடைபெற்ற தலைகீழாக குதிக்கும் நீச்சல் சாகசப் போட்டி: ஆடவர் பிரிவில் பிரிட்டனின் ஆடன் ஹஸ்லூப் சாம்பியன் பட்டம் வென்றார்..!! appeared first on Dinakaran.

Tags : Inverted Swimming Adventure Competition ,Japan ,Britain ,Auden Hasloop ,TOKYO ,Takashiko Valley ,Japan… ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...