×

கீழக்கரை பகுதியில் இடையூறாக சுற்றி திரிந்த 46 மாடுகள் பிடித்து அடைப்பு

கீழக்கரை : கீழக்கரை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 46 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளது.கீழக்கரை நகராட்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிலர் வீட்டில் வளர்க்கும் மாடுகளை பால் கறந்து விட்டு கீழக்கரை நகருக்குள் விட்டு விடுகின்றனர். இதனால் வாகனம் செல்வதில் மிகவும் சிரமம் அடைந்து வருவதோடு தெருக்களில் பொதுமக்கள் நடமாட முடியாதபடி விபத்துகள் ஏற்படுகிறது.

இதுகுறித்து விசிக சார்பில் நகர் செயலாளர் பாசித் இலியாஸ், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் மாடுகள் குறித்து கலெக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெருவில் சுற்றிதிரியும் மாடுகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்படி கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் உத்தரவின் பேரில், கீழக்கரை நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்த 46 மாடுகளை பிடித்து அடைக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குள் நகராட்சிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்திய பின்பு மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை மீட்டு செல்ல வேண்டும். மீறும் பட்சத்தில் மூன்று நாட்கள் கழித்து மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அனுமதியோடு அனைத்து மாடுகளும் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் கூறியுள்ளார். அதன் பேரில் கீழக்கரையில் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சிக்கு அருகில் உள்ள இடத்தில் அடைக்கப்பட்டு நகராட்சி ஊழியர்கள் மாட்டிற்கு உணவு அளித்து பாதுகாத்து வருகின்றனர்.

The post கீழக்கரை பகுதியில் இடையூறாக சுற்றி திரிந்த 46 மாடுகள் பிடித்து அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Lower Bank ,Keezhakarai ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...