×

யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை.. இளைய தமிழர்கள் உலகை வெல்லட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : இளைய தமிழர்கள் உலகை வெல்லட்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது.அதில் ஒன்றாக, #நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை #UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் “நான் முதல்வன் – போட்டித் தேர்வு” என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இப்பிரிவானது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி, திறன்களை வளர்த்துக் கொள்ளும் உதவிகளைச் செய்யவிருக்கிறது. அதன்படி ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் முதல் நிலை (PRELIMS) தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு செப்டம்பர் 10 அன்று “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2023” எனப்படும் மதிப்பீட்டு தேர்வை நடத்தி, தேர்ந்தெடுக்கும் 1000 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை.. இளைய தமிழர்கள் உலகை வெல்லட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : UPSC ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED யுபிஎஸ்சி தேர்வுக்கு உதவியாக இருந்த...