×

சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து சேவை… ஈஸிஆரில் சோதனை ஓட்டம் தொடங்கியது!!

சென்னை : சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டத்தை மாநகர போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. 1997ம் ஆண்டு சென்னையின் அடையாளமாக இருந்த டபுள் டக்கர் எனப்படும் மாடி பேருந்துகளின் சேவை 2008ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதிகரித்த போக்குவரத்து நெரிசலால் இந்த சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் மின்சார டபுள் டக்கர் பேருந்தின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. நெரிசலான நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது. குறைந்த செலவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த பேருந்துகளை 50 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் தமிழக அரசு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இந்த மாடி பேருந்துகளை இயக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டால் சென்னைவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெறும் என உறுதியாக கூறலாம்.

The post சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து சேவை… ஈஸிஆரில் சோதனை ஓட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Double tucker ,Chennai ,ESR ,Double tucker bus ,tucker ,ESR! ,Dinakaran ,
× RELATED மூணாறில் தேர்தல் விழிப்புணர்வு...