×

இந்தியாவின் நம்பர் 1 கிராண்ட்மாஸ்டர் குகேஷ்.. தமிழகத்திற்கு பெருமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : உலக செஸ் வீரர்கள் தரவரிசையில் இளம் வயதில் டாப் 10 இடத்திற்கு முன்னேறிய குகேஷிற்கு தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது இளம் வீரர் குகேஷ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என பெயர் எடுத்துள்ளார். அசர்பைஜானில் நடந்து வரும் உலக கோப்பை செஸ் தொடரின் முதல் 2 சுற்றுகளில் குகேஷ் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தரவரிசை பட்டியலில் 2755 புள்ளிகள் பெற்று 9ம் இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் உலகிலேயே பிடே ரேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடத்தில் உள்ள மிக குறைந்த வயதுடைய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ். சர்வதேச தரவரிசையில், விஸ்வநாதன் ஆனந்த் 10வது இடத்திலும் இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடத்திலும் உள்ளார்.

இந்த சாதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” உலக செஸ் ஜாம்பவான்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்கு முன்னேறியுள்ள, வீரர் குகேஷுக்கு என் வாழ்த்துகள்; திறமையும், உறுதியும்தான் உங்களை மிக சிறந்த வீரராக உயர்த்தியுள்ளது; உங்களின் இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்ததுடன், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது!” எனத் தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவின் நம்பர் 1 கிராண்ட்மாஸ்டர் குகேஷ்.. தமிழகத்திற்கு பெருமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : India ,Grandmaster ,Kukesh ,Tamil Nadu ,CM. G.K. ,Stalin ,Chennai ,CM. G.K. Stalin ,
× RELATED கிரிக்கெட் ஸ்டேடியங்களில் புகையிலை,...