×

நாடு முழுவதும், 1,365 ஐ.ஏ.எஸ், 703 ஐ.பி.எஸ்., 301 ஐ.ஆர்.எஸ்., 1,042 ஐ.எஃப்.எஸ்.காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஒன்றிய அமைச்சகம் பதில்!

டெல்லி : இந்திய நிர்வாக பணியில் 1,365 இடங்களும் இந்திய காவல் பணியில் 703 இடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய பணியாளர் துணை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார். அதே போல, இந்திய வனப்பணியில் 1,042 காலிப் பணியிடங்களும் இந்திய வருவாய் சேவையில் 301 இடங்களும் காலியாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் ஆகிய பணிகளில் நேரடி ஆள் சேர்ப்பு அடிப்படையில், பணியிடங்களை நிரப்புவதற்காக சிவில் ஸர்வஸ் தேர்வுகளை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது,

காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக கூறிய அமைச்சர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவி உயர்வு ஒதுக்கீட்டில் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது என்றார். கடந்த ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் வருடாந்திர சேவையை 180 ஆகவும், ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post நாடு முழுவதும், 1,365 ஐ.ஏ.எஸ், 703 ஐ.பி.எஸ்., 301 ஐ.ஆர்.எஸ்., 1,042 ஐ.எஃப்.எஸ்.காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஒன்றிய அமைச்சகம் பதில்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union ,Indian Administrative Mission ,Indian Police ,I.S. F.F. S. Union Ministry ,Khalib ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு...