×

மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு

 

சிவகாசி, ஆக.4: மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே ஜமீன் சல்வார்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராமச்சந்திரா(34). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி பட்டாசு ஆலையில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ராமச்சந்திராவை டார்ச்சர் செய்துள்ளார். இது குறித்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி ராமச்சந்திராவை தகாத வார்த்தை பேசி கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Karuppasamy ,Zamin Salwarpatti ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை