×

மூணாறு நகரில் உயர்கோபுர மின்விளக்குகள் பழுது: இரவில் நடமாட சுற்றுலா பயணிகள் அச்சம்

 

மூணாறு, ஆக. 4: கேரளா மாநிலம், மூணாறு தென்னிந்தியாவின் சிறப்பு மிக்க சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் மூணாறு நகர் பகல், இரவு என எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மூணாறு நகரின் மையப்பகுதியான காந்தி சிலை, தபால்நிலைய பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால் மூணாறு நகரத்தின் பல பகுதிகள் இருட்டில் மூழ்கியுள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மூணாறு நகர் இருள் சூழந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் வெளியே ெசல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மூணாறு ஊராட்சி நிர்வாகம் விரைந்து பழுதான உயர்கோபுர மின்விளக்குளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த உயர்கோபுர மின்விளக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பழுதாகி சரி செய்யப்பட்டன. தற்போது மீண்டும் பழுதடைந்துள்ளன. விரைவில் மின்விளக்குகள் சரி செய்யும் பணி தொடங்கப்படும் என்றனர்.

The post மூணாறு நகரில் உயர்கோபுர மின்விளக்குகள் பழுது: இரவில் நடமாட சுற்றுலா பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Triple City ,Kerala ,Moonaru ,South India ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...