×

10 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள்: எம்.எல்.ஏ வழங்கினார்

 

திருப்பூர், ஆக.4: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து கால்களை இழந்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட புதிய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கி பேசினார்.

இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், வட்ட செயலாளர்கள் நந்தகோபால், ஆதவன், முருகேசன், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் நந்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள்: எம்.எல்.ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Assembly ,Dinakaran ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி