ஊட்டி, ஆக. 4: இந்திய விமான படையில் அக்னி வீர் வாயு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படையின் 01/2024 அக்னி வீர்வாயு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி வரை இணையதளம் மூலமாக இந்திய விமானப்படையின் https://agnipathvayu.cdac.in என்ற வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
The post அக்னி வீர் வாயு திட்டத்தின் கீழ் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.