×

ஈரோட்டில் இன்று புத்தக திருவிழாவை அமைச்சர் துவக்கி வைக்கிறார்

 

ஈரோடு, ஆக.4: ஈரோட்டில் புத்தக திருவிழா சிஎன் கல்லூரி வளாகத்தில் இன்று (4ம் தேதி) தொடங்கி 12 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தக திருவிழா இன்று (4ம் தேதி) மாலை துவங்க உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த திருவிழாவை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைசிறந்த தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் வடமாநிலங்களில் இருந்து ஆங்கில பதிப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தினமும் காலை 11 மணிக்கு தொடங்கும் புத்தகத் திருவிழா இரவு 9.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் தினந்தோறும் மாலையில் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.

The post ஈரோட்டில் இன்று புத்தக திருவிழாவை அமைச்சர் துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : minister ,Erode ,Erode book festival ,CN College ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது