×

கந்தர்வகோட்டையில் ஆடிப்பெருக்கு விழா

கந்தர்வகோட்டை,ஆக.4: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சிவன் கோயில் அமைந்துள்ள சங்கூரணி குளக்கரையில் ஏராளமான புதுமண தம்பதிகளும், பெண்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இறைவழிபாடு செய்தனர். பின்னர் திருமாங்கல்யம் புது கயிறு மாற்றிக்கொண்டார். மேலும் திருமண நாள் மாலையை புதுமண தம்பதிகள் ஒன்று சேர்ந்து குளத்தில் விட்டனர். குளக்கரையில் நிலை கண்ணாடி வைத்து ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பேரிக்காய், கொய்யாபழம், அரிசி கலவை வைத்து வழிபாடு செய்து அனைவருக்கும் கொடுத்தனர். மேலும் ஆலயத்தில் ஆபசகரேஸ்வரர் உடனூறை அமராவதி அம்மன் வழிபாடு செய்து பெண்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு கட்டி அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டனர்.

The post கந்தர்வகோட்டையில் ஆடிப்பெருக்கு விழா appeared first on Dinakaran.

Tags : Adiperu festival ,Gandharvakota ,Kandarvakottai ,Sankurani Kulakarai ,Shiva temple ,Pudukottai District, Kandarvakottai ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...