×

மயிலாடுதுறையில் ரூ.20 கோடியில் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

மயிலாடுதுறை, ஆக.4: மயிலாடுதுறை ரயில் நிலையம் ரூ.20 கோடியில் மேம்படுத்தும் பணியை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் ஆய்வு ெசய்தார். ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் மயிலாடுதுறை ரயில் நிலையம் உள்பட 90 ரயில்வே நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் வரை கூடுதலாக தேவைப்படும் சுமார் 10 கி.மீ.தூரம் புதிய ரயில் பாதை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பூம்புகார்- கல்லணை சாலையில் மாப்படுகையிலும், மணல்மேடு சாலையில் நீடூரிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்தும் டெண்டர் விட்டு பணி தொடங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வர்த்தக சங்கத் தலைவர் செல்வம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அப்போது எஸ்.ஆர்.எம்.யூ. சங்க திருச்சி கோட்டத் தலைவர் மணிவண்ணன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post மயிலாடுதுறையில் ரூ.20 கோடியில் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthur ,Trichy Railway ,Mayaladudura ,A.4 ,Anbazhagan ,Mayiladudura ,Mayiladuindustry ,
× RELATED வேலூர், விழுப்புரம் என 161 ரயில்...