×

அகரம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

போச்சம்பள்ளி, ஆக.4: போச்சம்பள்ளி வட்டம் அகரம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சோழர்களால் வழிபட்ட பழமை வாய்ந்த சுப்ரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. ஆடி பெருக்கை முன்னிட்டு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுப்பிரமணிசுவாமி மற்றும் கொற்றையம்மன் சுவாமிகளை பக்தர்கள் வழிபட்டனர். சுவாமிகளுக்கு திரவியங்களை கொண்டு அபிஷேக ஆதாரணைகளுடன் சிறப்பு தீபாராதனை, 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் சுமார் 2 ஆயிரம் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.

The post அகரம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Akaram Subramanya Swamy Temple ,Bochambally ,Subramaniaswamy ,Cholas ,Tenpenna River ,Bochambally Vattam Akaram ,Akaram Subramania Swamy Temple ,Dinakaran ,
× RELATED கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து