×

காவடிகள், பூஜை பொருட்கள் விற்பனை அமோகம் வேலூரில் திரண்ட பொதுமக்கள் முருகன் கோயில்களில் பரணி, ஆடி கிருத்திகையொட்டி

வேலூர், ஆக.4: முருகன் கோயில்களில் பரணி, ஆடி கிருத்திகையொட்டி காவடி மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வேலூர் பஜாரில் பொதுமக்கள் திரண்டனர். தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் திருவிழா நடத்தியும், சிறப்பு பூஜைகள் செய்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 8ம் தேதி பரணி கிருத்திகை, 9ம் தேதி ஆடி கிருத்திகை வருகிறது. இதையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பரணி கிருத்திகையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் காவடி எடுத்து சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து வேலூர் வழியாக திருத்தணி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக மேளதாளம் முழங்க காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக செல்கின்றனர். இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் காவடிகள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வேலூர் பஜாரில் திரண்டனர். வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகே விற்பனைக்காக குவிக்கப்பட்ட காவடிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். மேலும் மற்ற பூஜை பொருட்கள் வாங்கவும் அதிகளவில் திரண்டதால் கிருபானந்தவாரியார் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

The post காவடிகள், பூஜை பொருட்கள் விற்பனை அமோகம் வேலூரில் திரண்ட பொதுமக்கள் முருகன் கோயில்களில் பரணி, ஆடி கிருத்திகையொட்டி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Murugan ,Bharani ,Adi Krithika ,Adi Kritika ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...