×

பெற்றோர் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த விவசாயி சாவு

நெல்லை, ஆக. 4: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள புத்தன்தருவை பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி உச்சிமாகாளி. இவர்களுக்கு கந்தசாமி (38) உள்ளிட்ட 4 மகன்கள். இவர்களில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்த கந்தசாமி பெற்றோரை கவனித்து வந்தார். இருப்பினும் உடல்நலக்குறைவால் குமாரசாமியும், அவரது மனைவி உச்சிமாகாளியும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் தீராத சோகத்திற்கு ஆழான கந்தசாமி, பெற்றோரின் போட்டோவை அடிக்கடி பார்த்து கதறி அழுது வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (2ம் தேதி) விஷம் குடித்த கந்தசாமி மயங்கி விழுந்தார். இதுகுறித்து தெரியவந்ததும் அவரை மீட்ட உறவினர்கள் திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கந்தசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து அவரது சகோதரர் சவுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பெற்றோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பெற்றோர் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த விவசாயி சாவு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Kumaraswamy ,Putthandaruai Periya Street ,Tattarmadam, Tuticorin District ,Uchimakali ,
× RELATED நெல்லை சுற்று வட்டாரங்களில் உழவுக்கே ரூ.10 ஆயிரம் செலவழிக்கும் விவசாயிகள்