×

விபத்தில் பெண் பலி

 

திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல்லை அருகே உள்ள சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியைச் சேர்ந்தவர் கோபி.இவரது மனைவி மல்லிகா (47).இவர் கடந்த 1ம் தேதி அவரது மகள் சுபதர்ஷினி (19) உடன் டூவீலரில் செம்பட்டி-திண்டுக்கல் ரோட்டில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். டூவீலரை சுபதர்ஷினி ஓட்டி வந்தார். பஞ்சம்பட்டி பிரிவு அருகே வந்தபோது சுபதர்ஷினி தலைக்கவசத்தை சரியாக மாட்டாததால், மல்லிகாவின் மீது தலைக்கவசம் விழுந்தது.

இதனால் நிலை தடுமாறி மல்லிகா கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

The post விபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Gopi ,Chinnalapatti Anjugam Colony ,Mallika ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்