×

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 64 நான்கு வழிசாலை பணிகளில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23ல் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில், 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மாநில அளவில் அனைத்து அலகுகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மற்றும் நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் ஆய்வு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

கூட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் : முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23ல் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில், 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 6 முத்திரைப் பணிகள் விரிவாக ஆய்வு செய்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொழிற்துறை தொடர்பான வைப்பு நிதி பணிகள் சிப்காட், டாட்டா, ஓலா போன்ற பல்வேறு தொழில்துறை சம்பந்தமான 9 வைப்பு நிதி பணிகளை சிறப்பு கவனம் செலுத்தி, ஆய்வு செய்து விரைந்து முடித்திட வேண்டும்.

புறவழிச் சாலைப்பணிகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளை தனி கவனம் செலுத்திசெயல்படுத்த வேண்டும். விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ள 12 பணிகள் மற்றும் நில எடுப்பு நிலையில் உள்ள 28 பணிகள் என 40 பணிகளை தனி கவனம் செலுத்தி செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 பாலங்கள் கட்டுதல், 100 பாலங்கள் புனரமைத்தல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் போன்ற பணிகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் எனது கள ஆய்வின் போதும் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வின் போதும், இது குறித்த சுணக்கம் இருந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகஸ்ட் மாதம் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதால், சிறு பாலங்கள், குழாய் பாலங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி நீர் வழி பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி பராமரிக்க வேண்டும். பாலங்களை வெள்ளை அடித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நான் கள ஆய்வு செய்ய உள்ளேன். பாலங்கள் பராமரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 64 நான்கு வழிசாலை பணிகளில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister A. ,Velu ,Chennai ,Dinakaran ,
× RELATED தண்டராம்பட்டு அருகே விபத்தில்...