×

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதை நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: தமிழகத்திலேயே முதல்முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் ‘பனைவிதை வங்கி’ என்ற ஒரு அமைப்பை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சென்ற ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். இந்த பனைவிதை வங்கி தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து இருந்தார்.அதன்படி, பனைவிதை வங்கியினுடைய செயல்பாடுகள் இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதில், மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில், முதல் கட்டமாக ஆடிப்பெருக்கு தினத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிளும் பனைவிதை நடும் பணி துவங்கப்பட்டது. அதில், கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, வில்லிவாக்கம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் பனைவிதை நடும் பணி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்தந்த கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலோசனையின் பேரில், மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் மேற்பார்வையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணியாளர்கள் பனைவிதையை நடும் பணியில் ஈடுபட்டனர்.

The post ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதை நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Panchayats ,Adiperu Day ,Tiruvallur ,Tamil Nadu ,Panaiseed Bank ,Tiruvallur district ,District Collector ,Alby John Varghese ,
× RELATED ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம்