×
Saravana Stores

தேசிய உத்தரவாத கழகம் அறிவிப்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு ஏ-பிளஸ் தகுதி

சென்னை: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர உத்தரவாத கழகம் (NAAC) ஏ-பிளஸ் தகுதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்க நிலையிலேயே இந்த பல்கலைக் கழகம் ஏ-பிளஸ் தகுதியைப்பெற்று சாதனை படைத்தது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் சுற்றிலேயே NAAC தர வரிசை பெற்றுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்திய அளவில் செயல்படும் 16 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் தேசிய தர உத்தரவாத கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் குஜராத்தின் அகமதாபாத் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துக்கு அடுத்தபடியாக 2ம் இடத்தை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

தேசிய தர உத்தரவாதக் கழகத்தின் 5 பேர் கொண்ட வல்லுநர் குழு கடந்த மாதம் 17ம் தேதி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது. இப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 11 லட்சம் பேர் கல்வி கற்றுள்ளனர். தேசிய தர உத்தரவாத கழகத்தின் 3.32 புள்ளிகளை பெற்றதன் மூலம் யுஜிசியின் அனுமதியோடு இணைய வழியில் படிப்புகளை நடத்த, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் உயர்கல்வியை வழங்குவதில் மிகப் பெரிய பங்களிப்பை தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேசிய உத்தரவாத கழகம் அறிவிப்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு ஏ-பிளஸ் தகுதி appeared first on Dinakaran.

Tags : National Assurance Corporation ,Tamilnadu ,Open University ,Chennai ,Tamil Nadu Open University ,National Quality Assurance Corporation ,NAAC ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற...