×

ஆயுர்வேதம் படிக்க சமஸ்கிருதம் தெரியணும்: அசாம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின்னர் சர்மா டிவிட்டரில் பதிவிடுகையில், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை(பிஏஎம்எஸ்) படிப்பில் சேருவதற்கு சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் சமஸ்கிருதத்தில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே ஆயுர்வேத படிப்பில் சேருவதற்கு அனுமதி அளிக்கப்படும். நுழைவு தேர்வில் சமஸ்கிருதத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

The post ஆயுர்வேதம் படிக்க சமஸ்கிருதம் தெரியணும்: அசாம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Assam Cabinet ,Gauwahati ,Assam ,Chief Minister ,Himantha Biswa Sharma ,Sharma ,
× RELATED அமித்ஷா தொடர்பான போலி வீடியோ: ஒருவர் கைது