×

உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையால் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி, பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் நடந்தது. அதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த செவ்வாய் கிழமை, பொதுமக்களிடம் 192 கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், வடநெம்மேலி ஊராட்சியில் தனிநபர் வீட்டின் கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்தபோது, உயிரிழந்த அண்ணாமலை என்பவரின் மனைவி கீதாவுக்கு, வடநெம்மேலி கிராம ஊராட்சி நிதியிலிருந்து இழப்பீடு தொகையாக ரூ.7.50 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். பின்னர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் மணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாகிதா பர்வின், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அரசு, திருக்கழுக்குன்றம் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுபலட்சுமி பாபு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbarasan ,Chengalpattu ,Thamo Anparasan ,Anparasan ,Dinakaran ,
× RELATED சென்னையில் வடகிழக்கு பருவமழையை...