×

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு ஏ பிளஸ் அங்கீகாரம்

சென்னை: மத்திய அரசின் கீழ் இயங்ககூடிய தேசிய தர நிர்ணய குழுவானது, நாடு முழுவதும் இருக்க கூடிய உயர்கல்வி நிருவனங்களை நேரில் ஆய்வு செய்து, அந்த கல்வி நிருவனங்களில் இருக்க கூடிய வசதிகள், தகுதிகளுக்கு ஏற்ப வரிசையாக தர நிர்ணயங்களை வழங்கி வருகிறது. அந்த குழுவானது தற்போது தமிழகத்தில் முகாமிட்டு உயர்கல்வி நிறுவணங்களை ஆய்வு செய்து, அதற்கு உரிய சான்றிதல்களையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் தமிழக அரசின் கீல் இயங்க கூடிய தமிழ்நாடு அரசின் கீழ் இயங்க கூடிய தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்த தேசிய தர நிர்ணய குழுவினர், அந்த பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் என்ற உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது பல்கலைக்கழகத்தினர் இடையே மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகம் தொடங்கபட்டு சுமார் 20 ஆண்டுகளில் இது போன்ற தேசிய தர நிர்ணய குழுவின் உச்சபட்ச அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல்முறை ஆகும். இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக கல்வி திட்டங்களை நடத்துவதற்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திற்கு ஏ பிளஸ் அங்கீகாரம் appeared first on Dinakaran.

Tags : A Plus ,Tamil Nadu Open University ,Government of Tamil Nadu ,Chennai ,National Quality Standardizing Committee ,Central Government ,
× RELATED திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு