×

சென்னை கல்லூரியில் படிக்கும் ஆசை நிறைவேறாததால் மாணவி தற்கொலை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே சென்னை கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பெற்றோர் நிராகரித்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது மகள் ஜனனி (19). இவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் தனது ஆசையை ஜனனி கூறியுள்ளார்.

எனினும், சென்னை வெகுதூரத்தில் இருப்பதால், அங்கு மகளை அனுப்பி படிக்க வைப்பதற்கு பெற்றோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜனனி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்னை கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவி ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post சென்னை கல்லூரியில் படிக்கும் ஆசை நிறைவேறாததால் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai college ,Pallipatu ,Chennai ,college ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...