×

எடப்பாடி பழனிசாமியின் அருமை பிரதமர் மோடிக்கு தெரிகிறது, அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

சென்னை: எங்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா , ஜேபி நட்டா ஆகியோர் தான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியின் அருமை பிரதமர் மோடிக்கு தெரிகிறது, அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்:
அண்ணாமலை பாஜக மாநில தலைவர் அவ்வளவுதான். எங்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா , ஜேபி நட்டா ஆகியோர் தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் பிரதமர் மோடி. அவருக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? அவர் கட்சியை வளர்க்க அவர் பேசுகிறார். அவர் கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு. தேர்தல் வரும் போது மட்டும் தான் நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம் என கூறினார்.

The post எடப்பாடி பழனிசாமியின் அருமை பிரதமர் மோடிக்கு தெரிகிறது, அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Modi ,Anamalai ,Former minister ,Sellore Raju ,Chennai ,Amitsha ,JP Nata ,Edapadi Palanisamy ,PM ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...