×

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு; கதறும் பெற்றோர்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள காசிபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இன்று ஆடிப்பெருக்கு என்பதால் கொந்தாளம் புதூரை சேர்ந்த 3 மாணவர்கள் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க காவிரி ஆற்றுக்கு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, காவிரி கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (18), சௌத்ரி (14), குப்புராஜ் (17) ஆகிய 3 மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துவிட்டு தீர்த்தம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயம் எதிர்பாராத விதமாக சௌத்ரி நீச்சல் தெரியாமல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக குப்புராஜ், ஜெகதீஷ் ஆகியோர் முயற்சித்துள்ளனர். அப்போது 3 பேரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கொடுமுடி காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் 3 மாணவர்களையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சௌத்ரி, குப்புராஜ் ஆகியோர் உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஜேததீஸ் உடலை கொடுமுடி தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். மாணவர் சௌத்ரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கொடுமுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு; கதறும் பெற்றோர்..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Korumudi, Erode district ,Erode ,Erode district ,Korumudi Kasipalayam ,Korumudi ,Kaviri River ,Erode District, ,Karumudi ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...