×

5ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நாளை மறுநாள் சனிக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். இதில், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 18 முதல் 35 வயது வரையுள்ள வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப் படத்துடன் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post 5ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : 5th Private Sector Employment Camp ,Kanchi Collector ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchi Collector Information ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...