×

சென்னையில் ரூ.178.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.178.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.8.2023) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், போரூர் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய ​மதகு​ அமைத்தல் மற்றும்​ போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகள், அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பழவேற்காடு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் 71 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியானது, ஹிந்து காலனி 4வது தெரு மற்றும் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் ஆரம்பித்து அதன் வழியாக நங்கநல்லூர் 100 அடி சாலை, நங்கநல்லூர் 46வது தெரு, நங்கநல்லூர் 6வது பிரதான சாலை குபேர முனுசாமி சாலை வழியாக வீராங்கள் ஓடையில் சென்றடைகிறது.

இதன் மொத்த நீளம் 2.29 கிலோ மீட்டர் ஆகும். இதில் 1.78 கிலோ மீட்டர் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இப்புதிய மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம் ஹிந்து காலனி, பி.வி நகர் மற்றும் நேரு நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் பயனடையும்.

The post சென்னையில் ரூ.178.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,G.K. Stalin ,Chief Minister ,Mukhera ,Chennai Corporation ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...