×

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lieutenant (NCC Special Entry) (Apr-2024).

மொத்த இடங்கள்: 55.
ஆண்கள்- 50. (இவற்றில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
பெண்கள்-5. (இவற்றில் ஓரிடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.).

சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது வரம்பு: 01.01.2024 தேதியின்படி 19 முதல் 25க்குள்.
தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று, என்சிசியில் 2 வருட பயிற்சி பெற்று, ‘சி’ சான்று பெற்றிருக்க வேண்டும்.
போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை.

உடற்தகுதி: ஆண்கள்: உயரம்- 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். பெண்கள்: உயரம்- 152 செ.மீ., குறைந்தபட்சம் 42 கிலோ உடல் எடையை பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-25, புஷ்அப்ஸ்-13, சின்அப்ஸ்-6. 3-4 மீட்டர் தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். அக்டோபரில் பயிற்சி தொடங்கும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 3.8.2023.

The post என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை appeared first on Dinakaran.

Tags : Army ,NCC ,Indian Army.… ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ