×

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: வன அலுவலர் அறிவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்று முதல் கூடுதலாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. கொடைக்கானல் வாகன ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பழைய கட்டண நடைமுறையே தொடரும் என்று மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிவித்துள்ளார்.

The post கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: வன அலுவலர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Parijam lake ,Kodaikanal ,Kodaikanal Barijam lake ,Barijam lake ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் தொடர் மழை: பழனி வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது