×

தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாட்டம்: அதிகாலை முதலே காவிரி ஆற்றங்கரைகளில் குவிந்த மக்கள்..!!

தஞ்சை: தமிழ்நாடு முழுவதும் ஆற்றங்கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரையிலான காவேரி படுகை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கலைக்கட்டியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம் மேல காவேரி, மயிலாடுதுறை துலாகட்டு காவேரி உள்ளிட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடினர்.

பின்னர் படித்துறையில் படையலிட்டு பின்னர் கூடுதுறைநாதர் கோவிலில் சாமிதரிசனம் செய்தனர். திருச்சி அம்மா மண்டபம் காவேரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு புனித நீராடி படையலிட்டு காவேரி தாய்க்கு நன்றி செலுத்தினர்.

புதுமண தம்பதிகள் தாலி மாற்றிக்கொண்டு பின்னர் அரங்கநாதரையும், திருவானைக்காவல் ஜம்மு கேஸ்வரரையும் தரிசனம் செய்தனர். இதேபோல கும்பகோணத்தில் உள்ள மேலக்காவேரி, பாலக்கரை உள்ளிட்ட காவேரி படித்துறைகளில் ஏராளமான பெண்கள் காலை முதலே வழிபாடு செய்தனர். காவேரி ஆற்று நீர் வளத்தால் விளைந்த அரிசி, பழங்கள் ஆகியவற்றை படித்துறைகளில் வைத்து காவேரி அன்னையை வழிபட்டனர்.

The post தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாட்டம்: அதிகாலை முதலே காவிரி ஆற்றங்கரைகளில் குவிந்த மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Adipperu Trilday ,Tamil Nadu ,Kaviri riverbanks ,Adipperu ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...