×

தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் : தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை ஒட்டி, தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் : சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களை பல போர்களில் தோற்கடித்து விரட்டியவருமான தீரன் சின்னமலை அவர்களது 218வது நினைவு தினம் இன்று.தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாது, இளம் வயதிலேயே நாட்டுக்காக பெரும் படை திரட்டி, இறுதி மூச்சு வரை போராடிய தீரன் சின்னமலை அவர்களது தியாகத்தைப் போற்றி வணங்குகிறோம். இந்திய சுதந்திரத்தில், நம் தமிழ் மண்ணின் பங்கை இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி ஏற்போம்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ஆம் நினைவு நாள் இன்று.இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம் பெற்ற தீரன் சின்னமலையில் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் :ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-ஆவது நினைவுநாள் இன்று. தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும். தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்

The post தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் : தலைவர்கள் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Theeran Chinnamalai ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஆங்கிலேயர்களுக்குச்...