×

குண்டுமல்லி கிலோ ₹500க்கு விற்பனை

சேலம், ஆக.3: ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ₹500க்கு விற்பனை செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பரவலாக குண்டுமல்லி, சன்னமல்லி, ஜாதிமல்லி, காக்கட்டான், சம்பங்கி, சாமந்தி, அரளி, நந்தியாவட்டம் உள்பட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட், பெங்களூர், கோவை, சென்னை உள்பட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. முகூர்த்தம், கோயில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பூக்களின் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும். இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விற்பனை களைக்கட்டியது.

தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை சற்று அதிகரித்தது. ஒரு கிலோ குண்டுமல்லி ₹500க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ₹360, ஜாதிமல்லி ₹320, காக்கட்டான் ₹240, கலர் காக்கட்டான் ₹160, மலை காக்கட்டான் ₹240, சம்பங்கி ₹200, சாதாசம்பங்கி ₹200, அரளி ₹180, வெள்ளை அரளி ₹190, மஞ்சள் அரளி ₹190, செவ்வரளி ₹220, ஐ.செவ்வரளி ₹200, நந்தியாவட்டம் ₹40, சிவப்பு நந்தியாவட்டம் ₹80, சாமந்தி ₹120 என்று விற்பனை செய்யப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post குண்டுமல்லி கிலோ ₹500க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Salem ,V.U.C. ,Dinakaran ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...