×

₹50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், ஆக.3:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1850 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் சுரபி ரகம் குவிண்டால் ₹7100 முதல் ₹8610 வரையிலும், பிடி ரகம் ₹6683 முதல் ₹7330 வரையிலும், கொட்டு ரகம் ₹6050 முதல் ₹5070 வரையிலும் ஏலம் போனது. சேலம், ஈரோடு, கோவை, அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், ₹50 லட்சத்திற்கு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

The post ₹50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Thiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,
× RELATED மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா