×

ஆட்டோ ஸ்டாண்டை பூந்தோட்டமாக மாற்றும் ஓட்டுனர்கள்

பந்தலூர், ஆக.3: பந்தலூர் அருகே உள்ள எருமாடு ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பூச்செடிகளை நீண்ட வரிசையில் வைத்து பராமரித்து வருவது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதன் ஆட்டோ ஓட்டுநர்கள் பஜார் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்துள்ளனர். இவர்கள் தங்கள் ஆட்டோ ஸ்டாண்டில் ஏராளமான பூச்செடிகளை தொட்டிகளில் நீண்ட வரிசையில் வைத்துள்ளனர். அதனை முறையாக நீர் ஊற்றியும் பராமரித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களின் இந்த செயல்பாடு எருமாடு பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

The post ஆட்டோ ஸ்டாண்டை பூந்தோட்டமாக மாற்றும் ஓட்டுனர்கள் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Erumadu ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு