×

ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் தின விழா கொண்டாட்டம்

நீடாமங்கலம், ஆக. 3: நீடாமங்கலம் அருகே ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் தின விழா நடைபெற்றது. நீடாமங்கலம் வட்டாரம் ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் 2வது நாள் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திருஒளி கலந்து கொண்டு பேசினார் . ஆரம்ப நிலைய சுகாதார அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி நேர செவிலியர்கள், அங்கன்வாடி அலுவலர் தாய்மார்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தாய்மார்கள் உண்ண வேண்டிய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு அதன் சத்துக்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

The post ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Breastfeeding Day ,Rayapuram Primary Health Centre ,Needamangalam ,Rayapuram Primary Health Center ,Needamangalam… ,Dinakaran ,
× RELATED கொரடாச்சேரியில் இருந்து சென்னைக்கு...