×

தேனிமலை முருகன் கோயில் கிரிவல பாதையை சீர்செய்ய வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை

பொன்னமராவதி, ஆக.3: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேனிமலையில் பிரசித்தி பெற்று விளங்கும் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திரு கார்த்திகை, தை பூசம், பங்குனி உத்திரம் மற்றும் விசேட நாட்கள் செவ்வாய், வௌ்ளி கிழமைகள் என பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வழிபாடு நடைபெற்று வருகின்றது. கோயிலின் தெற்குப்பகுதி பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலை, கிழக்குப்பகுதி கருகப்பூலாம்பட்டி சாலை நல்ல முறையில் உள்ளது. ஆனால் வடக்கு மற்றும் மேற்குப்புற சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக பக்தர்கள் கிரிவலம் நடந்து செல்ல முடியாத அறவிற்கு உள்ளது. எனவே தேனிமலை முருகன் கோயில் கிரிவலப்பாதையினை சீர் செய்து தரமான சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேனிமலை முருகன் கோயில் கிரிவல பாதையை சீர்செய்ய வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thenimalai Murugan Temple ,Ponnamaravati ,Murugan temple ,Thenimalai ,Pudukottai ,Kriwala ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...