×

அபாகஸ் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்ற வேதாரண்யம் மாணவி

வேதாரண்யம், ஆக.3: 12 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்குபெற்ற அபாகஸ் போட்டியில் வேதாரண்யம் மாணவி இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார். அவரை கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் பாராட்டினார். வேதாரண்யம் நகராட்சி ராஜாளிகாடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன்-வேதா தம்பதியின் மகள் மஹதி (11) இவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மனநிலை வேக எண்கணித போட்டியில் (அபாகஸ்) முதலிடம் பெற்றார். தற்போது சென்னை மகாபலிபுரத்தில் உலக அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் பங்கு பெற்றார். இப்போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் வேதாரண்யம் மாணவி மஹதி இரண்டாம் இடம் பெற்று கோப்பை மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவி மஹதியை, நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் பாராட்டினார்.

The post அபாகஸ் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்ற வேதாரண்யம் மாணவி appeared first on Dinakaran.

Tags : Vedaranthyam ,Abacus Competition ,Vedaranayya ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED 12 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்...