×

திருமங்கலம் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை

திருமங்கலம், ஆக. 3: திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூரினை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் அஜித்குமார் (27). திருமங்கலம் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அஜித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருமங்கலம் டவுன் போலீசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமங்கலம் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Thirumangalam, Ga. ,Ajitkumar ,Mahaalingam ,Malarapanur ,Thirumangalam Electricitarium ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...