×

அதிமுக, அமமுக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஆக.3: சிவகங்கை அரண்மனைவாசல் முன் அதிமுக(ஓபிஎஸ்), அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்தும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமமுக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, அதிமுக(ஓபிஎஸ்) மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை வகித்தனர். அமமுக நகர் செயலாளர் அன்புமணி, பொறியாளர் அணி மாவட்ட நிர்வாகி மகேஷ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிமுத்து, நகர் செயலாளர் கே.வி.சேகர், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக, அமமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,AAMK ,Sivagangai ,OPS ,AAMUK ,Koda ,Nadu ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்